இன்று முதல் நடைமுறைக்கு வரும் அதிரடி நடவடிக்கைகள் – மக்களே அவதானம்!

flat icon calendar 01 January. January 01. Vector flat daily calendar icon. Date and time, day, month. Holiday. Season.

அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள புதிய வரித்திருத்தம் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

தேசிய வருமான வரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்று முதல் புதிய வரித்திருத்தமானது நடைமுறைப்படுத்தப்படும் என நிதி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி பிரமானம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே புதிய வரித்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, இன்று முதல் மேலும் சில நடைமுறைகள் அமுலுக்கு வரவுள்ளன.

குறிப்பாக இன்று முதல் ரயில் நிலையங்களில் யாசகம் பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பேருந்துகளில் இன்று முதல் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *