கிளிநொச்சியில் புதுவருடத்தில் இடம்பெற்ற சோகம்! பரிதாபமாக பலியான இளைஞர்கள்

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4.00மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிய பாரஊர்தி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை விநியோகித்து விட்டு திரும்பி வந்துள்ளது.

இதன்போது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் பாரஊர்தியுடன் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

இந்தவிபத்தில் கிளிநொச்சி உதயநகர் மேற்கைச்சேர்ந்த 23வயதுடைய வரதராஜா ஜெமினன் மற்றும் யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச்சேர்ந்த 29வயதுடைய செல்வநாயகம் அஜிந்தன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பாரஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *