
டுபாய் நாட்டை சேர்ந்த கோடீஸ்வர பெண்ணின் வீட்டில் பாரிய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 அரை கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை இலங்கையர் ஒருவர் திருடியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் டுபாய் நாட்டில் 60 வயதுடைய திருமணமான பெண்ணின் வீட்டில் சேவை செய்துக் கொண்டிருந்த நிலையில் அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார்.
அதன் பின்னர் இலங்கை இளைஞனுடன் அவர் காதல் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் டுபாய் பெண் இலங்கை வருவதற்கு தீர்மானித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபரான இலங்கையர், குறித்த கோடீஸ்வர பெண்ணின் தங்கம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
குற்ற விசாரணை திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபரான இளைஞரை 30ஆம் திகதி வரை விளக்கமறியல்படுத்துவதற்கு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியல்படுத்தப்பட்டவர் 30 வயதுடைய திருமணமாகாதவர் என குறிப்பிடப்படுகின்றது.
Leave a Reply