
ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களை தம் வசம் வைத்திருந்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
களனி பிரதேசத்தில் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 4.230 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 1 கிராம் ஐஸ்ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பேலியகொடை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதொடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a Reply