
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஷபக்ஷ ஆகிய இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி உரையாடியுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) தொலைபேசி ஊடாக தொடர்பினை ஏற்படுத்திய மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2020 புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது, இருநாடுகளும் நட்புறவுகளை மேம்படுத்துவதில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது தொடர்பாக விரிவான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு இலங்கை தலைவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததைப் போன்று பூட்டான், நேபாளம், மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply