
பல பிரதேச மக்களின் பாவனையிலுள்ள செம்மணி இந்து மயானத்தை அண்டிய பகுதிகளைக் துப்பரவு செய்யும் பணியில் வலி- கிழக்கு பிரதேச சபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, செம்மணி இந்து மயானத்தை அண்டிய பகுதிகளில் உள்ள வீதிகள், வயல்கள் ஆகிய இடங்களில் வழிப்போக்கர்களால் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்ட நிலையில் அப்பகுதியில் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது.
இந்நிலையில் அந்தப் பிரதேசத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற வலி- கிழக்கு பிரதேச சபையினர் துப்பரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக நல்லூர் பிரதேச சபையின் ஜே.சி.பி.இயந்திரமும் வலி கிழக்கு பிரதேச சபையின் குப்பை அகற்றும் உழவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு, துப்புரவு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply