
ரஷ்யாவில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளை, ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறித்தனமாக தாக்குதல் நடத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவுக்கு முன்னதாக, ரஷ்யாவின் மாகனில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் மிகைல் மிசியேவ், 18, மற்றும் அகமது இமகோஷேவ், 22, ஆகியோர் தாக்குதலைத் தொடங்கினர்.
சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 34 வயதான ஜெலெம்கான் கோகோர்கோவ் மீது காரை ஏற்றிய தீவிரவாதிகள், அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
பின்னர், பொலிஸ் வாகனத்திற்குள் இருந்த மற்றொரு அதிகாரியான சூரப் டவர்பேகோவை சரிமாரியாக தாக்கினர், கத்தியால் குத்தப்பட்டு டவர்பேகோ மருத்துவமனையில் இறந்தார்.
உடனே சம்பவயிடத்தை சுற்றி வளைத்த பொலிஸ் அதிகாரிகள் தாக்குதல்தாரிகள் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில், மிசியேவ் சுட்டுக் கொல்லப்பட்டார், அதே நேரத்தில் அவருடன் தாக்குதலில் ஈடுபட்ட இமகோஷேவும் சுட்டப்பட்டார். ஆனால், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு முன்னர், மிசியேவ்-இமகோஷேவ் ஜோடி கத்திகளை ஏந்தியிருப்பதைக் காட்டும் ஒரு மோசமான படத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இமகோஷேவ் உள்ளுர் கை-மல்யுத்த சாம்பியன் என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து நகரம் உடனடியாக பொலிசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது மற்றும் தாக்குதல் காரணமாக பட்டாசு காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
ரஷ்யாவின் இங்குஷெட்டியா பிராந்தியத்தின் தலைநகரான மாகஸில் புத்தாண்டு விழாக்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.
Leave a Reply