
நாடாளுமன்ற அவைத் தலைவராக அமைச்சர் குணவர்தனவையும், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாகவும் நியமிக்க ஆளும் கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சபை கூடவுள்ளதால் அவர் பங்கேற்று அரசின் கொள்ளை உரையை ஆற்றவுள்ளார்.
Leave a Reply