உள்ளாட்சி தேர்தலில் நேற்று வெற்றி பெற்றவர்…இன்று மரணம்

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்ட நபர் நேற்று வெற்றி பெற்று சந்தோஷமாக இருந்த நிலையில், இன்று அவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் கிராம ஊராட்சியில் மணிவேல் என்ற 64 வயது நபர் போட்டியிட்டார். இவர் 962 வாக்குகள் பெற்று ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனால் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கி வந்து குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், இன்று அதிகாலை அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து சிகிச்சையளித்து வந்த நிலையில், சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

அதன் பின் அவரின் உடலை குடும்பத்தினர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

கிராம ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றவர் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *