
எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
8ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. இதன்போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சிக்கான ஆசன வரிசையில் சஜித் பிரேமதாசவுக்கு எட்டாவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது எதிர்க்கட்சி தலைவரின் ஆசனமாகும். நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் ஏழாவது ஆசனம் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், ரணிலின் விசேட கோரிக்கைக்கமைய அவருக்கு ஒன்பதாவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
Leave a Reply