தலைபிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்! திடீரென வயிறு வீங்கியதால் உயிரிழப்பு

தமிழகத்தில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் திடீரென உயிரிழந்த நிலையில் அவர் வயிற்றில் பழையதுணி மற்றும் பஞ்சு இருந்ததாலேயே வீக்கம் ஏற்பட்டு உயிர் பிரிந்தது என வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவருடைய மனைவி பிரியா (24).

தலைபிரசவத்துக்காக பிரியா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அறுவை சிகிச்சை மூலம் பிரியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், குழந்தையும் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 31ம் திகதி பிரியாவின் வயிறு திடீரென வீங்க தொடங்கியது, மேலும் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இந்த நிலையில் பிரியாவின் உறவினர்கள் நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள், அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது பிரியாவின் வயிற்றில் பஞ்சு, பழைய துணியை வைத்து மருத்துவர்கள் தையல்போட்டு விட்டனர்.

இதனால் தான் அவரது வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு இறந்துவிட்டார்.

எனவே இந்தளவு அஜாக்கிரதையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரியா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *