நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா? வெற்றி முடிவுகள்

வெற்றி முடிவுகள் -4மணி நிலவரம்

ஒன்றிய கவுன்சிலர் (5067)

திமுக – 2336

அதிமுக – 2184

மற்றவை – 535

நான்குபேரும் நான்கு விதம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இந்த நான்கு பெண்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

அதில், 21 வயதான ரோகிணி என்ற பெண் நாமக்கல் கபிலர் மலை அரகே சேளுர் ஊராட்சி மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் நாமல்கல் மாவட்டம் திருசெங்கோடு ஒன்றியத்தில் கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி ஊராட்சி மன்ற தலைவராக கல்லூரி மாணவி சந்தியாராணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும், மதுரை அரிட்டாபட்டி ஊராட்சி மன்ற தலைவராக 79 வயது மூதாட்டி வீரம்மாள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிஏஏ தான் காரணம்

அதிமுக சிஏஏவை ஆதரித்ததால்தான் பெரும்பாலான தொகுதிகளில் தோல்வியை தழுவியதாக அதிமுக எம்பி அன்வர் ராஜா புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.

வேட்பாளர் தற்கொலை முயற்சி

மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை விடுத்தும், அதை அதிகாரிகள் செய்யாததால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார்.

வெற்றி முடிவுகள்

மாவட்ட கவுன்சிலர்(515)

திமுக – 268

அதிமுக – 239

நாம் தமிழர் – 0

அமமுக – 0

பிற கட்சிகள் -0

ஒன்றிய கவுன்சிலர் (5067)

திமுக – 1968

அதிமுக – 1657

சுயேட்சைகள் – 436

காங்கிரஸ் – 116

பாமக – 114

அமமுக- 93

தேமுதிக – 88

பாஜக – 87

சிபிஎம் – 19

மதிமுக – 16

சிபிஐ – 69

விசிக – 06

நாம் தமிழர் – 01

திமுக கூட்டணி இதர -0

12 மணி முன்னிலை நிலவரம்

ஒன்றிய கவுன்சிலர்(5067)

திமுக – 2285

அதிமுக – 2148

நாம்தமிழர் – 1

அமமுக – 90

மாவட்ட கவுன்சிலர் (515)

திமுக – 267

அதிமுக – 237

நாம்தமிழர் – 0

அமமுக – 0

திமுக எம்.பியின் வாக்குவாதம்

திமுக வெற்றி பெற்ற தொகுதிகள் அறிவிக்கப்படாமல் குழப்பம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் திமுகவின் தருமபுரி தொகுதி எம்.பி மருத்துவர் செந்தில், அதிகரிகளுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

அமைச்சரின் சொந்த ஊரில் திமுக வெற்றி

இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சொந்த ஊரான சேவூரில், ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தீர்ப்பிற்கு தலை வணங்குகிறேன்

தீர்ப்பிற்கு தலை வணங்குவதாக துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு

திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்று கூறுகின்றனர். மேலும் ஒரே ஒரு ஓட்டு பெற்றுள்ளார் என்றால் வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவரின் இருமனைவிகள் வெற்றி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த விவிசாயி தனசேனர் மனைவிகள் இருவர் வெவ்வேறு தொகுதிகளில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில் செல்வி ஏற்கனவே வழுவூர் அகரம் கிராம ஊராட்சியின் தலைவராக இருந்துள்ளார். தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வழுவூர் அகரம் கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கு செல்வி மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோர் தனசேகரின் மற்றொரு மனைவியான காஞ்சனாவின் சொந்த ஊர் கோவில்குப்பம் சாத்தனூர். அவருக்கு அவரது சொந்த கிராமத்திலேயே ஓட்டு இருந்தது. கணவரின் ஊரான வழுவூர் அகரம் கிராமத்துக்கு மாற்றவில்லை. கோவில்குப்பம் சாத்தனூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு காஞ்சனா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றியை அறிவிக்காத அதிகாரிகள்

திமுக குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற பின்னரும் அதை அறிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், எம்.பி ஜோதி மணி, எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி ஆகியோர் வெற்றி திமுகவின் அறிவிக்கவில்லை என்றும், அதிமுக-விற்கு சான்றிதழ் வழங்கியதாகவும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திமுக முன்னிலை

மாவட்ட கவுன்சிலர் (515)

அதிமுக – 239

திமுக – 250

ஒன்றிய கவுன்சிலர் (5067

அதிமுக – 1889

திமுக – 2116

வெற்றி சான்றிதழ் பெற்றவர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டர் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் வெற்றி அறிவிக்கப்பட்ட உடன் வெற்றி சான்றிதழ் பெற்று கொண்டிருந்தார்.

வாக்களிக்க செல்லாத மக்கள்.. ஆனால் வெற்றி பெற்ற பெண்

திருசெந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உச்சிவிளை ஊராட்சி பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், 6 வார்டுகளில் யாரும் போட்டியிடவில்லை. தலைவர் பதவிக்கு இரு பெண்கள் போட்டியிட்டனர். மாற்று சமூகத்தை சேர்ந்த பெரும்பாண்மை மக்கள் வசிக்கும் அந்த கிராமத்தில், வாக்களிக்க 13பேர் மட்டும் சென்றுள்ளனர். இதனால், ராஜலட்சுமி என்பவர் 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

26மணி நேரத்தை கடந்து வாக்கு எண்ணிக்கை

வாக்குகள் எண்ணும் பணி 26 மணி நேரத்தை கடந்துள்ளது. நேற்று காலை 8மணிக்கு துவங்கிய பணிகள் இன்னும் நிறைவடையவில்லை

நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், நாம்தமிழர் கட்சிக்கு முதல் முறையாக ஒரு வெற்றி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊராட்சி ஒன்றிய தேர்தலில், திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இன்றும் முழுமையாக தேர்தலி விவரங்கள் அறிவிக்கப்படாத சூழலில், நாம் தமிழர் கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டில் நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சுனில் என்பவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி என்பதால் அந்த கட்சி வெற்றியை கொண்டி வருகின்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *