
ஈராக்கில், அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் படை தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிபட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் குழுக்களுடன் தொடர்புடைய ஆயுதங்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. அங்கு அமெரிக்கா, ஐ.எஸ் குழுக்களை எதிர்த்து போராடும் சூழலில், ஈரானுடன் தொடர்புடைய அந்த ஆயுத கிடங்குகளை குறிவைத்து அமெரிக்க குண்டு மழை பொழிந்தது.
முன்னதாக, அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் பல அமெரிக்கர்கள் கொள்ளபட்டதாகவும், 4 அமெரிக்க வீரர்கள் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் மையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்க பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரான் படை தலைவர் Qasem Soleimani கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமை அறிவித்துள்ளது. இதற்கு உரிய முறையில் ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஈராக் போராளிகளின் தலைவர் Abu Mahdi al-Muhandis-யும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், வெளிநாட்டில் பணி செய்யும் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா இராணுவம், Qasem Soleimani கொல்ல முடிவு எடுத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply