காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

வின்னிபெக்கில் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வின்னிபெக்கைச் சேர்ந்த 12 வயதான அலியா காம்ப்பெல் என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி இறுதியாக தென்பட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச்சிறுமியை ஐந்து அடி இரண்டு அங்குலம் எனவும், 104 பவுண்ஸ்கள் எடையுள்ளவள் எனவும், மேலும் மெல்லிய உடற் தோற்றம், பழுப்பு நிற முடி மற்றும் கண்கள் கொண்டவள் எனவும் பொலிஸார் விபரித்துள்ளனர்.

மேலும், சிறுமி வெள்ளை குளிர்கால கோட் அணிந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இச்சிறுமி குறித்து தகவல் அறிந்தவர்கள் தம்மை உடனடியாகத் தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *