
சுதந்திர தினத்தன்று நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் பயனுள்ள மரக்கன்று ஒன்றை நாட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘பாதுகாப்பான தேசம் – வளமான நாடு’ என்ற தெனிப்பொருளில் கீழ் இம்முறை 72 ஆவது சுதந்திர தின நிகழ்வை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த நிகழ்வில் பொருத்தமான கலாசார நிகழ்வுகளை மாத்திரமே இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றவும் நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் பயனுள்ள மரக்கன்றை நாட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது மக்களுக்கு இடையூறின்றி நிகழ்வுகளை நடத்துதல் மற்றும் நிகழ்வு இடம்பெறும் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply