
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடன உரை மீது விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பாக விவாதம் கோரவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 7ஆம் திகதி மற்றும் 8ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply