
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன்கட்டு ஜீவநகர் மாதிரி கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு பிள்ளையினை கொண்ட இளம் குடும்பம் ஒன்றின் தற்காலிக கொட்டில் தீயில் எரிந்து முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில் கடந்த 1ம் திகதி மாலை வேளை அடுப்பில் இருந்த நெருப்பு பற்றியதில் வீடு முற்று முழுதாக எரிந்துள்ளதனால் வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குறித்த குடும்பம் உடுபுடவைகளோ, உணவுப்பொருட்களோ எந்த பொருட்களும் வாங்க முடியாத நிலையில் தவித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
https://www.facebook.com/jaffnaa/videos/1393980084109999/?__xts__%5B0%5D=68.ARDYWkbQ3yZj9oZ5T2Qoantaa9Mj1D98Cn-3jM7wPL8xbOF_iA6RXHyE9-MrIXovZvqlJxbGQR5ocRo1ZuoqJQKqip9EUajSCYbaHSJvsvZurnGlfVzaw1pqYxFreCB5KFqx4kC2sgw7BtAik7jzs8lzNraiumRBPjrGmtSi5PtSGvSJ88aMTDfK61kRGKhg8lVWwjEdAdl6VjTcVV3EGn9t7cS8XoQR5VxYkb3XHdSGdlkMXGROqFX0Y4Kdnsj9bIiwtMJuwuldGmIzyuXus_cM7_n09JbY87zvQZyIzRTATCek0pVnsOkUae4j4nRsGUEOHLM-EBw_FN8sOqo_TQ7dYFDVDRr_2GW3qQ&__tn__=-R
Leave a Reply