
தமிழ்நாட்டின் CM விஜய் என ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கும் நிலையில் வில்லனாக விஜய் சேதுபதி நடிகின்றார். மேலும் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 31 திகதி தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி முதல் 24 மணி நேரத்தில் அதிக #ஹேஷ் டேக்குகளில் டிரெண்டிங் செய்யப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை மாஸ்டர் திரைப்படம் பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தின் ’CM விஜய்’ என்று விஜய் ரசிகர்கள் சிலர் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CM of Tamilnadu’ என குறிப்பிட்டுள்ள அவர்கள், CM என்றால் Collection Master என்று விளக்கமும் கொடுத்துள்ளனர்.
Leave a Reply