
மன்னார்- மாந்தை மேற்கில் நாட்டை அழகு படுத்தும் ஜனாதிபதியின் செயற்றிட்டம் இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பயணிகள் தரிப்பிடங்கள் தூய்மையாக்கப்பட்டதுடன் வர்ணம் பூசுதல் மற்றும் படம் வரைதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை ) காலை இடம் பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில், அடம்பன் பொலிஸாரின் அனுசரனையுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாந்தை மேற்கு பிரதேச இளைஞர்கள் கலந்து கொண்டு வர்ணம் பூசுதல் மற்றும் படம் வரைதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு உதவி பிரதேசச் செயலாளர், இளைஞர்கள், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 10 பயணிகள் தரிப்பிடங்கள் இவ்வாறு தூய்மையாக்கி வர்ணம் பூசப்பட்டு படம் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply