
இந்தியா-இலங்கை மோதும் முதல் டி-20 போட்டி நாளை கவுகாத்தியில் நடைபெறவுள்ள நிலையில் காலநிலை தொடர்பில் வானிலை முன்னறிவிப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி கவுகாத்தியில் ஜனவரி 5ம் திகதி நாளை மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், கவுகாத்தியில் நாளை மாலை 7 மணிக்கு மேகமூட்டமான மற்றும் குளிர்ந்த காலநிலை நிலவும்.
88% ஈரப்பதத்துடன், வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்று வீசினாலும் மழை பெய்ய வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply