
வில்லேஜுயிஃப் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க் டெஸ் ப்ரூயர்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 2 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இனந்தெரியாத நபரொருவர் கையில் கூரான கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதல்தாரியை சரணடையுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், பொலிஸாரின் அறிவுறுத்தலை செவிமடுக்காத தாக்குதல்தாரி, தொடர்ந்து தாக்குதல் நடத்த முற்பட்ட போது, பொலிஸார் துப்பாக்கியால் மூன்று தடவைகள் சுட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல்தாரி எதற்காக இவ்வாறு தாக்குதல் நடத்தினார், அவரின் பெயர் உள்ளிட்ட விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இச்சம்பவம் குறித்து தற்போது புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply