
பெரும்பாலான பிரான்ஸ் மக்கள், பெண் ஜனாதிபதியை எதிர்பார்த்துள்ளதாக புதிய கருத்து கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம், 27ஆம் ஆகிய திகதிகளில், 18 வயதுக்கு மேற்பட்ட 1,028 பேரிடம் ஆர்.ரி.எல் நிறுவனம் நடத்திய கருத்துகணிப்பில் இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர் யாரும் போட்டியிடாத நிலையில், 2030ஆம் ஆண்டு இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் தெரிவாக வேண்டும் என பிரான்ஸ் மக்களில் நான்கில் மூவர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
71 வீதமான பிரான்ஸ் மக்கள் ‘2030ஆம் ஆண்டில் பெண் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாகுவது விரும்பத்தக்கது’ என தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் 1848ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 25 ஜனாதிபதிகளை கண்டுள்ள நிலையில், இதுவரை எந்த பெண்ணும் ஜனாதிபதியாக பதவி வகித்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் ஜனாதிபதியாக தற்போது இம்மானுவேல் மேக்ரோன் பதவி வகித்து வருகிறார். தற்போது மேக்ரோனிற்கு எதிராக அதாவது, அவர் கொண்டுவந்துள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக கிட்டதட்ட ஒருமாத காலமாக பிரான்ஸில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நினைவுக்கூரத்தக்கது.
Leave a Reply