மணல் அகழ்வு நிறுத்தப்பட்டதாக அதிகாாிகள் கூறியது பொய்..! வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்ந்தவா்களை விரட்டியடித்த மக்கள்..

யாழ்.வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை மடக்கி மக்கள் விரட்டியடித்த நிலையில், மக்கள் முறைப்பாடு வழங்கி 5 மணித்தியாலங்களின் பின்னா் பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனா். 

வடமராட்சி கிழக்கு பொற்பதி குடத்தனை பகுதியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த ரிப்பர் வாகனம் ஒன்றினை மக்களாக சேர்ந்து இன்று அதிகாலை 4 மணயளவில் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக வீதி ஓரமாக  மணல் மண்ணை ஏற்றிக் கொண்டிருந்த வேளை பொற்பதி இளைஞர்களும் பொது மக்களும் இணைந்து ரிப்பர் வாகனம் ஒன்றினையும் சாரதி மற்றும் ஒருவரையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக பருத்தித்துறை பொலிசாருக்கும்  பொலிஸ் அவசர் இலக்கம் 119 க்கும் அதிகாலை 3 15 மணியிலிருந்து பல தடவைகள் அறிவிக்கப்பட்டும் காலை 8 மணிக்கே பொலிசார் சம்பவ இடத்திற்கு சமூகமளித்தனர். மக்களால் கைப்பற்றப்பட்ட ரிப்பர் மற்றும் சாரதி உதவியாளர் ஆகியோரை  பொலிசார் வரும்வரை காத்திருந்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்து.

அண்மைய நாட்களாக குறித்த பிரதேசத்தில் திருட்டு தனமாக மணல் அகழ்வதை கட்டுப்படுத்தும் நோக்கோடு பொற்பதி இளைஞர்கள் விளிப்பு குழு ஒன்றினை அமைத்து தமது சூழலை  பாதுகாக்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *