
இலங்கை ஜாம்பவான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் லசித் மலிங்கா யார்க்கர்களை வீசும் கலையை அவருக்கு கற்பிக்கவில்லை என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
பும்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது, எனது கிரிக்கெட் அனைத்தும் நான் டிவி-யை பார்த்து கற்றுக்கொண்டேன். இப்போது கூட, நான் வீடியோக்களைப் பார்க்கிறேன், ஃபீட்பேக் கேட்கிறேன், பின்னர் நான் விரும்பும் வழியில் சொந்தமாகத் தயாராக விரும்புகிறேன்.
பகுப்பாய்வை நானே செய்ய முயற்சிக்கிறேன். ஏனெனில் கிரிக்கெட் மைதானத்தில் நான் தனியாக இருப்பேன். எனக்கு உதவ யாரும் இருக்கப் போவதில்லை, அதனால் எனக்கு நானே உதவ முடியும் என்று கூறினார்.
மேலும், மலிங்கா எனக்கு யார்க்கரைக் கற்றுக் கொடுத்தார் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. அவர் களத்தில் எனக்கு எதுவும் கற்றுக்கொடுக்கவில்லை.
அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் மனதைப் பற்றியது. வெவ்வேறு சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது. எப்படி கோபப்படக்கூடாது. துடுப்பாட்ட காரருக்கான திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது அவர் மேலும் கூறினார்.
முதுகுவலி காரணமாக சில மாதங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து விலகிய பும்ரா, ஜனவரி 5 முதல் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட இந்தியா-இலங்கை டி-20 தொடரில் மீண்டும் களமிறங்குகிறார்.
Leave a Reply