
வவுனியா வர்த்தக சங்கத்தின் “அனைவருக்கும் கல்வி உதவித்திட்டத்தின்” ஊடாக 200 வறிய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்நிகழ்வு இன்றயதினம் முன்னெடுக்கப்பட்டது.
வர்த்தகசங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தலைமயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வர்த்தகசங்கதலைவரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான ரி.கே.ராஜலிங்கத்தின் சேவைகளை நினைவுகூர்ந்து கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், சமூக சேவைத்துறையில் வடமாகாண விருதினை பெற்ற வவுனியாவை சேர்ந்த விக்னா என்பவரும் வர்த்தக சங்கத்தால் கௌரவிக்கப்பட்டு நினைவுசின்னங்கள் வழங்கவைக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் நகரசபை தவிசாளர் இ.கௌதமன்,பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம்,வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமார்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன்,நகரசபை உறுப்பினர்கள்,ராணுவத்தினர் பொலிசார், மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


Leave a Reply