விடிந்ததும் இத்தாலியர்களாக மாறியதால் அதிர்ச்சியில் உறைந்த சுவிஸ் நகர மக்கள்!

ஒரே இரவில் தாங்கள் இத்தாலியர்களாக மாறியதை ஜீரணிக்க இயலாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஒரு சுவிஸ் நகர மக்கள்.

கடும் எதிர்ப்பு தெரிவித்தும், சுவிட்சர்லாந்துடனேயே இணைந்திருக்க விருப்பம் தெரிவித்து புகார் ஒன்றில் கையெழுத்து சேகரித்தும் எந்த பயனுமில்லாததால் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் அவர்கள்.

Campione d’Italia என்னும் நகரம், சுவிஸ் மாகாணமான Ticinoவின் எல்லைக்குள் அமைந்துள்ளது.

1860களிலிருந்து இந்த வார துவக்கம் வரை, இந்த நகரம் சுவிட்சர்லாந்தின் சுங்க எல்லைக்குள்தான் இருந்து வந்தது.

ஆனால், ரோமின் கோரிக்கையை ஏற்று ஐரோப்பிய ஒன்றியம், Campione நகரை இத்தாலிக்கு திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 2020 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து Campione நகரம் இத்தாலியுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

ஆனால், இதுவரை சுவிஸ் குடிமக்கள் போலவே வாழ்ந்து வந்த அந்நகர மக்கள் இந்த மாற்றத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

காரணம், இதுவரை அவர்கள் சுவிட்சர்லாந்தில் பல சலுகைகளை அனுபவித்து வந்தார்கள். உதாரணமாக, சுவிஸ் தொலைபேசி நிறுவனமான Swisscom, அவர்களுக்கு 7.7 சதவிகித மதிப்புக்கூட்டு வரியில் சேவை வழங்கிவந்தது.

ஆனால், இத்தாலியில் மதிப்புக்கூட்டு வரி 22 சதவிகிதம்.

அத்துடன் அவர்கள் சுவிஸ் கரன்சியைத்தான் பயன்படுத்தி வந்தார்கள், சுவிஸ் லைசன்ஸ் பிளேட்டை பயன்படுத்தித்தான் வாகனம் ஓட்டினார்கள். குப்பை அள்ளுவது, தண்ணீர் சுத்திகரிப்பது என அனைத்தையுமே சுவிட்சர்லாந்துதான் செய்துவந்தது.

இத்தாலியுடன் இணைவதால் ஏற்பட இருக்கும் பொருளாதார மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து கவலையடைந்த குடிமக்கள் கமிட்டி ஒன்று, தங்களை சுவிட்சர்லாந்துடனேயே இருக்க அனுமதிக்கக்கோரி ரோமுக்கு அளித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஒரே இரவில் தாங்கள் இத்தாலியர்களாக மாறியதால் வர இருக்கும் மாற்றங்களை ஜீரணிக்க இயலாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் Campione நகர மக்கள்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *