
ஹப்புத்தளை பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த விமானப்படை வீரர்களின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
இதற்காக உயிரிழந்த விமான படை வீரர்களின் சடலங்கள் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணியளவில் ஹப்புத்தளை தம்பிபிள்ளை மாவத்தை பிரதேசத்தில் விமான படைக்கு சொந்தமான Y 12 ரக விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்திருந்த குறித்த நான்கு விமானப்படை வீரர்களுமே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறிப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply