
இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் காணும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார் என இலங்கைத் தமிரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியின் கொள்கை உரைக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடினார்.
இதன்போது சிங்கள பெருபான்மை மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். தமிழ் மக்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவேண்டுமென எங்களுக்கு வாக்களித்தனர்.
எனவே இந்த விடயம் குறித்து நாம் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதியிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். அவர் ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ தெரியவில்லை” என மேலும் தெரிவித்தார்.
Leave a Reply