நடுரோட்டில் வேனுடன் எரிந்து சாம்பலான பயணிகள்… திகிலூட்டும் சம்பவம்

இந்தியாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் 3 பேர் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களுரு அருகே வேன் மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

துமகுருவின் குப்பியில் உள்ள டோடகுனி அருகே தேசிய நெடுஞ்சாலை 206ல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்துக்கு பின் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்துள்ளது. இதில், பேருந்தில் இருந்து அனைரும் காயமின்றி தப்பியுள்ளளனர்.

தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவயிடத்திற்கு விரைந்தன. இறந்த மூவரும் வசந்த்குமார் (23), ராமையா (62), நரசம்மா (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் குப்பி தாலுகாவில் உள்ள என் ஹோசஹள்ளியில் வசிப்பவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

தப்பித்த நான்கு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக குப்பி பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எரிபொருள் டேங்க் தீப்பிடித்து வெடித்து இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும், தலைமறைவான பேருந்து டிரைவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *