
எம்மிடம் அதிகாரம் உள்ளபோது பதவி உயர்வுகளை பெற்றுக்கொள்ள சட்ட நிபுணர்கள் வரிசையில் நிற்பார்கள். ஆனால், இன்று நாம் எதிர்க்கட்சிக்கு சென்றவுடன் எமது தரப்பினருக்கு ஒரு ஆபத்து என்றவுடன், ஒருவர் கூட மன்றில் முன்னிலையாக வருவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “இத்தகைய விடயங்களை நாம் மறக்கமாட்டோம். நான் இங்கு ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சியாக நாம் தற்போது இருக்கும் காலத்தில், எமது தரப்பினர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே, நாம் எதிர்க்காலத்தில் பதவி உயர்வுகள் போன்ற சலுகைகளை வழங்குவோம்.
இதனை நான் இங்கு உறுதியாக கூறிக்கொள்கிறேன். கயிறு இழுப்பவர்களுக்கே, தேர்த்திருவிழாவின்போது முன்னுரிமை வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply