
இத்தாலியில் ஜேர்மனி சுற்றுலா பயணிகள் மீது காரொன்று மோதிய கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலைக் குறித்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆல்டோ அடிஜ் பிராந்தியத்தில் போல்சானோவின் வடகிழக்கில் உள்ள வால்லே ஆரினா என்ற கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்குப் பிறகு இந்த விபத்து சம்பவித்துள்ளது.
ஜேர்மனியர்கள் தங்கள் பேருந்தில் ஏற கூடிவந்தபோது, எதிரே வேகமாக வந்த ஒரு கார் அவர்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் இவ்விபத்திற்கு கார் சாரதி போதையில் இருந்ததே காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கு இத்தாலி பெரும்பாலும் ஜேர்மன் பேசும் தன்னாட்சி பகுதி, டோலோமைட்டுகள் மற்றும் போல்சானோவைச் சுற்றியுள்ள விசித்திரமான கிராமங்களில் அதன் ஸ்கை ரிசார்ட்ஸுடன் ஜேர்மன் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளது.
Leave a Reply