
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன் பொலிஸ் பதிவேட்டில் தகவல்களை மாற்றினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ பண்டார பதவியிறக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்கூடியே அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் எந்ததொரு பொலிஸ் நிலையங்களிற்கும் அந்த எச்சரிக்கை சஞ்ஜீவ பண்டார அறிவிக்கவில்லை.
மேலும் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரிகள், தாக்குதல் எச்சரிக்கை முன்கூட்டியே பொலிஸ் நிலையங்களிற்கு கிடைத்ததை போல பொலிஸ் ஆவணங்களில் மாற்றம் செய்ய அவர் பணித்ததை வெளிப்படுத்தியிருந்தனர்.
எனவேதான் களுத்துறை மாவட்ட மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்து வந்த அவரை, மூத்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் என்ற தர நிலையிலிருந்து பதவியிறக்கப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a Reply