கிளிநொச்சியில் மாபெரும் கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த மாபெரும் கண்காட்சி  (EXPO ARIVIYAL NAGAR- 2020 )  இன்று ஆரம்பமாது.

குறித்த கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி  கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த கண்காட்சி நிகழ்வை காண்பதற்காக வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும் இந்த  கண்காட்சி நிகழ்வு இன்றும் நாளையும் 8 மணி முதல் தொடங்கி பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் இவற்றை காண்பதற்கு கட்டணங்கள் அறவிடப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் குறைந்த செலவிலான மனைகள் அமைத்தல், நீர் முகாமைத்துவத்தினை பேணல், நவீன நகர திட்டம், நவீன போக்குவரத்து முறைமைகள், ரோபோக்கள், நவீன கட்டுமான துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் குறித்த கண்காட்சியில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *