
ஹிக்கடுவ, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வீசா இன்றி தங்கியிருந்த 5 வெளிநாட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதற்கமைய ஹிக்கடுவ-மில்லகொடவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கல்கிஸ்ஸயில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து கட்டார் பிரஜை ஒருவரையும் தாய்லாந்து பெண் ஒருவரையும் கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், தெஹிவளை பகுதியில் வீசா இன்றி தங்கியிருந்த நைஜீரிய பிரஜை ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Leave a Reply