நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – கறுவப்பங்கேணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உன்னிச்சைக் குளத்தில் நீராடச்சென்ற நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இளைஞர்களுடன் இணைந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நீராடச்சென்ற அவர், ஆழமான பகுதியில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு – கறுவப்பங்கேணி அம்புறுஸ் வீதியைச் சேர்ந்த நிஷாந்தன் எனும் (20 -வயது) இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *