
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் இருவருரையும் பொலிஸார் முன்னிலைப்படுத்தியப்போது, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தகவல் கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply