
பௌத்தர்களினாலேயே கடந்த காலங்களில் பௌத்த மதம் நிந்திக்கப்பட்டு வந்ததாக, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வீரக்கெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “சிங்கள- பௌத்தர்கள் தவிர்ந்த ஏனைய ஒருவர்கூட, தங்களின் மதத்தையோ மத குருவையோ நித்திப்பதை நான் கண்டதில்லை.
ஆனால், பௌத்தர்கள் இதனை தான் கடந்தகாலங்களில் செய்துக் கொண்டிருந்தார்கள்.
மேலும் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாட்டைத்தான் மேற்கொண்டார்கள். இதனை ஊடகங்களிலும் பெருமையாக இவர்கள் கூறினார்கள்.
ஆனால், எந்த மதத்தையும் அவமரியாதைக்கு உட்படுத்தும் உரிமை இங்கு யாருக்கும் கிடையாது. இதனை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Leave a Reply