
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
நுகேகொட நீதவான் நீதிமன்றில் அவர் நேற்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த பிணை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள், மற்றும் வெடிபொருட்கள் தம்வசம் வைத்திருக்கும் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க இடமுண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியை இங்கே காணலாம்.
Leave a Reply