
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தி, ராகுல், பிரியங்கா, கெஜ்ரிவால் போன்றோர் கலவரத்தை தூண்டுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவான பிரசாரத்தை பா.ஜ.க. ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய வீடு வீடாகச் சென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் பிரசாரத்தை டில்லியில், அமித்ஷா நேற்று ஆரம்பித்து வைத்தார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் காங்., தலைவர்கள் ராகுல், பிரியங்கா, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். போராட்டத்தை காரணமாக வைத்து வன்முறையை தூண்டி விடுகின்றனர். பாக்.இல் குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவருக்குமான பதில். குருத்வாரா தாக்குதலின்போது தாக்கப்பட்ட சீக்கியர்கள் இந்தியாவிற்கு வரவில்லை என்றால், எங்கே போவார்கள்? எனவும் கேள்வியெழுப்பினார்.
Leave a Reply