
வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
காயமடைந்த குறித்த நபர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளதாக சம்பவ இடத்துக்கு சென்ற செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த காலங்களில் ஏற்பட்ட பகையே இந்த வாள்வெட்டுக்கு காரணம் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply