
அட்லீ பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வசூல் இயக்குனர் லிஸ்டில் வந்துவிட்டார். ஷங்கர், முருகதாஸிற்கு பிறகு அனைவரும் விரும்பும் கமர்ஷியல் இயக்குனராக அட்லீ மாறிவிட்டார்.
ஆனால், பிகில் படம் பட்ஜெட் அதிகமாகிவிட்டதால், அதுவும் சொன்னதை விட பல கோடிகள் அதிகமாகிவிட்டதால், பெரிய தொகைக்கு தான் விற்றார்கள்.
இதனால், போட்ட பணம் மட்டுமே பலருக்கும் கைக்கு வந்தது, யாருக்கும் பெரியளவில் நஷ்டமும் இல்லை, அப்படியிருக்க சமூக வலைத்தளத்தில் பிகில் தயாரிப்பு நிறுவனம், அட்லீயிடம் சம்பளத்தில் ரூ 3 கோடி திருப்பி கேட்டதாக ஒரு வதந்தி பரவி வருகின்றது.
அது வெறும் வதந்தி மட்டுமே, அட்லீயிடம் யாரும் பணத்தை திருப்பி கேட்கவில்லை, தயாரிப்பாளார்-அட்லீ குறித்து வந்த செய்தி பொய் என்பதே உண்மை.
Leave a Reply