
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றத்தை குறைக்க உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி – டிரம்ப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதனால் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் வலுவடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பல்வேறு உலக நாடுகளும் அமெரிக்கா-ஈரான் இடையேயான போர்ப்பதற்றங்களை தணிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையில் சுலைமானிக்கு, இந்தியாவில் நடந்த தாக்குதல்களிலும் பங்கு உண்டு என அமெரிக்க ஜனாதிபதிபதி டிரம்ப் கூறினார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிரம்புடன் நேற்று இரவு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா இந்திய இடையேயான உறவுகள் மேலும் வலுப்பெற்று வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அமெரிக்க மக்களுக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக டிரம்பும் தெரிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
ஈரான் தொடர்பில் மோடியும், டிரம்பும் எதாவது பேசினார்களா என்பது குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.
Leave a Reply