இன்றைய ராசிப்பலன் – 07.01.2020

இன்றைய  பஞ்சாங்கம்

07-01-2020, மார்கழி 22, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பின்இரவு 04.15 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பகல் 03.24 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் –  07.01.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பிள்ளைகள் படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் இருந்த தாமத நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நிலவிய கடன் பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

மிதுனம்

இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். 

தனுசு

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மீனம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *