இலங்கையில் உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படலாம்

உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடம் பாரபட்சமான நடைமுறைகளை கடைப்பிடிக்கும் உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) எச்சரித்துள்ளது.

குறித்த உணவகங்கள் ‘வெளிநாட்டினருக்கு மட்டும்’ (foreigners only) என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ மற்றும் அறுகம்பே ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு சில உணவகங்களில் நுழைய தமக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ தெரிவிக்கையில்,

எமது அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமையை அளிக்கிறது.

எனவே எந்தவொரு நபரும் கடைகள், பொது உணவகங்கள், ஹோட்டல்கள், பொது பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பொது இடங்களுக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடு, அணுகல் தொடர்பான எந்தவொரு இயலாமை, பொறுப்பு, கட்டுப்பாடு மற்றும் இனம், மதம், மொழி, சாதி, பாலின வேறுபாடுகள் அல்லது உடல் ஊனம், இயலாமை, பொறுப்புடைமை, கட்டுப்பாடு அல்லது நிபந்தனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.

சுற்றுலா பயணிகள் வருகை தராத நாட்களில் மாத்திரமல்லாது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற கடினமான சூழல் நிலவிய காலத்திலும் சுற்றுலாத்துறை செயல்படுவதற்கு உள்ளூர் சுற்றுலா பயணிகளே உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

எனவே இத்தகைய பாரபட்சமான நடைமுறைகளை உணவகங்கள் தவிர்க்க வேண்டும்.

வெளிநாட்டினருக்கு மட்டும் என தெரிவித்து உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடம் பாரபட்சம் காட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவற்றின் அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்த அல்லது இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையர்களுக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கும் சேவை செய்யக்கூடிய உணவகங்களுக்கு புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *