
குருநாகல் – மல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்றும் பௌசர் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply