3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினருக்கு பிணை

மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரன குணவர்தனவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவரது சிறைத்தண்டனை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல ணனுமதி வழங்கியது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 3 வருட சிறைத்தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரன குணவர்தனவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமைக்காகவே அவருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில், தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சரன குணவர்த்தன பணிபுரிந்தார்.

இக்காலப் பகுதியில் அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *