
180 பயணிகளுடன் சென்ற உக்ரைன் விமானம் ஈரானில் விபத்தில் சிக்கியுள்ளது.
Boeing 737 ரக விமானம் ஒன்று 180 பயணிகளுடன் ஈரானின் தலைநகர் Tehran அருகில் சென்ற போது Imam Khomeini சர்வதேச விமான நிலையத்தின் அருகில் விபத்தை சந்தித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tehran விமான நிலையத்தில் இருந்து விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே தொழில் நுட்ப கோளாறு காரணமாக இவ்விபத்து செவ்வாய்க்கிழமை இரவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லை என ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

விமானமானது கீழே விழுந்து தீப்பிடித்து எரியும் பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விமானமானது 7,925 அடி உயரத்தில் பறந்த பின்னரே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளது.
Tehran தென்மேற்கு புறநகரில் விபத்து நடந்த இடத்தில் விசாரணைக் குழு இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து செய்தித் தொடர்பாளர் ரெசா ஜாபர்சாதே தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் அலி கசானி கூறுகையில், தொழில்நுட்ப சிக்கல் தான் விபத்துக்கு காரணம் என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஏற்கனவே ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த விமான விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply