ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து டொமினிக் ராப் கண்டனம்

பிரித்தானிய வீரர்கள் உட்பட கூட்டணி படைகள் நிறுத்தப்பட்டுள்ள ஈராக் விமானத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களை வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் கடுமையாக கண்டித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவில் நடத்தப்பட்ட வான்வழி ஏவுகணைத் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானியத் தளபதி காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஈராக்கின் வடக்கில் இர்பில் மற்றும் பக்தாத்திற்கு மேற்கே அல் ஆசாத் ஆகிய இடங்களில் அமைந்துள்ள விமானத் தளங்கள் மீது ஈரான் 12 க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இதுபோன்ற பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் மீண்டும் மேற்கொள்ளக்கூடாது என பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் போது பிரித்தானியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகளால் தான் கவலைப்படுவதாகவும், மத்திய கிழக்கில் ஒரு போர் ஏற்பட்டால் அது பயங்கரவாதக் குழுக்களுக்கு மட்டுமே பயனளிக்கும் எனவும் ராப் தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *