
அவுஸ்திரேலியாவில் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க ஒட்டகங்களை சுட்டுக்கொல்லும் பணிகள் துவங்க உள்ளது.
அவுஸ்திரேலியாவில், தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. பல இடங்களில், தண்ணீர் இன்றி விலங்குகள் செத்து மடிகின்றன.
அவுஸ்திரேலியாவின் நீ சவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட பல பகுதிகளில், காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதால், அங்கம் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன.
இந்த காட்டுத்தீயினால், பல மில்லியன் உயிரினங்கள் தற்போது வரை இறந்துள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் தென் பகுதிகளில், காடுகளில் தண்ணீர் இல்லமல் ஒட்டகங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீரை தீர்த்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும். ஒட்டகங்களின் கழிவுகளில் இருந்து ஒரு டன் கார்பன்டை ஆக்சைடுக்கு நிகரான மீத்தேன் வாயுவை உருவாக்குகிறது. இது பூமி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுத்துள்ளன.
இதனால், FERAL வகை ஓட்டகங்கை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஹெலிகெப்டர்கள் மூலம், பறந்தபடி அவை சுட்டுக்கொல்லப்படும். இது இன்று முதல் நடைமுறைபடத்தப்பட உள்ளது.
இதனால், கிட்டத்தட்ட 10ஆயிரம் ஒட்டகங்கள் கொல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply