கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ராமச்சந்திரன் வசந்தராசா என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த 2012ஆம் ஆண்டு முல்லைத்தீவு நீதிமன்றில் வசந்தராசாவிற்கு எதிரான வழக்கொன்று நடந்து கொண்டிருந்த வேளையில் அவர் அவ்வழக்கிற்கு செல்லாத நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு சார்பாக பிணை கையொப்பமிட்ட அவரது சகோதரர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு சென்று வழக்கினை பார்ப்போம் என தனது தம்பியிடம் கூறியபோது தம்பி வழக்கிற்கு செல்ல பயந்து, கடிதம் ஒன்றினை எழுதி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *